AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எத்தனை நாள் திட்டம்?

Auxiom 4 Mission: தொழில்நுட்ப கோளாறு, வானிலை மற்றும் பாதுகாப்பு காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்ஸியம் 4 மிஷன் இன்று அதாவது ஜூன் 25, 2025 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12.01 மணிக்கு கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எத்தனை நாள் திட்டம்?
ஆக்ஸியம் 4 மிஷன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2025 09:18 AM IST

ஆக்ஸியம் 4 திட்டம்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம் மிஷன் 4 (Auxiom 4 Mission), ஜூன் 25 2025 தேதியான இன்று புறப்படும் என நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இந்த பணி பலமுறை தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும் தற்போதைய ஆக்ஸியம் சிறப்பு மனித விண்வெளி பயண இயக்குனருமான பேக்கி விட்சன், ஆக்ஸியம் நான்கு பயணத்திற்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விமானியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா தலைமையில் ஆக்ஸியம் மிஷன் 4:

மேலும் ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தை பிரதிநிதித்துவம் படுத்த போலாந்தை சேர்ந்த சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகிய இருவரும் ஆக்ஸியம் நான்கு மிஷினில் சுபான்ஷு சுக்ளா தலைமையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்று நண்பகல் புறப்படும் ஆக்ஸியம் 4 மிஷன்:


அமெரிக்காவில் இருக்கக்கூடிய நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் ஒன்பது ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் மூலம் 39a ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் விண்ணில் செலுத்த தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 12.01 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும்.

இந்திய விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா:

லக்னோவை சேர்ந்த இந்திய விமானப் படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 1984 ஆம் ஆண்டிற்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1984 இல் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மிக் 29 மற்றும் சுக்கோய் 30, எம் கே ஐ போன்ற ஜெட் விமானங்களில் சுமார் 2000 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லா இந்த ஆக்ஸியம் 4 மிஷினில் பைலட்டாக இயங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இவர்கள் 60 ஆய்வுகளை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் சுபாஷ் சுக்லா ஏழு ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Follow Us