AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்ணில் சீறிப்பாய்ந்த ஃபால்கன் 9 ராக்கெட்.. திட்டமிட்டப்படி தொடங்கிய ஆக்ஸியம் 4 மிஷன்..

Auxiom 4 Mission: நாசாவின் ஆக்ஸியம் 4 மிஷன் இன்று திட்டமிட்டப்படி விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பைலட்டாக பயணம் மேற்கொண்டுள்ளார். 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இவர்கள் 60 ஆய்வுகளை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணில் சீறிப்பாய்ந்த ஃபால்கன் 9 ராக்கெட்.. திட்டமிட்டப்படி தொடங்கிய ஆக்ஸியம் 4 மிஷன்..
ஆக்ஸியம் 4 மிஷன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Jun 2025 14:19 PM IST

தொழில்நுட்பக் கோளாறு, வானிலை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கருதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்ஸியம் 4 மிஷன் ஜூன் 25 2025 தேதியான இன்று நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவில் இருக்கக்கூடிய கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் மூலம் 39ஏ ஏவுதலத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும் தற்போதைய ஆக்ஸியம் சிறப்பு மனித விண்வெளி பயண இயக்குனருமான பெக்கி விட்சன் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இதில் விமானியாக பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக தொடங்கப்பட்ட ஆக்ஸியம் 4 மிஷன்:

டிராகன் கேப்ஸ்யூல் தரவை பதிவேற்றுவதில் கடைசி நிமிடத்தில் சிக்கல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்பட்டு விண்ணில் செலுத்த தயார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸியம் 4 மிஷனும் அதன் முக்கியத்துவமும்:

  • சாதகமான வானிலை இல்லாததன் காரணமாக இந்திய நேரப்படி சரியாக நண்பகல் 12.01 விண்ணில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. 2025 ஜூன் 26 ஆம் தேதி ஆனால் நாளை இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு ஆக்ஸியம் நான்கு மிஷன் நான்கு பேரைக் கொண்ட குழுவினரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொழில்நுட்பக் கோளாறு, வானிலை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கருதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்ஸியம் 4 மிஷன் ஜூன் 25 2025 தேதியான இன்று நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • பால்கன் 9 ராக்கெட் ஃப்லோரிடாவில் உள்ள நாசாவின் கெனடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 மிஷனில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு புறப்பட்ட அதே ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலமும் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் இரண்டாவது வீரர் ஆவார். 1989 ஆம் ஆண்டு கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து இவர் தற்போது இந்த பயணத்தை தொடங்கியுள்ளார். 2000 மணி நேரம் அனுபவம் உள்ள போர் விமானியான சுபான்ஷு சுக்லாவை இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பயணத்திற்கு முன்னதாக ஒரு மாத காலம் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், இது எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு செயல்பாடாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 14 நாள் மேற்கொள்ளப்படும் ஆக்ஸியம் 4 மிஷனில் சுமார் 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர். அவற்றில் ஏழு பரிசோதனைகள் இந்தியா ஆராய்ச்சியாளர்களால் முன்மொழிகப்பட்டுள்ளது.
  • லிஃப்ட் ஆஃபிற்கு பயன்படுத்தப்படும் பால்கன் 9 ராக்கெட் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இரண்டு நிலை கொண்ட இந்த ராக்கெட், முதல் நிலை பூமிக்கு மீண்டும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆக்ஸியம் 4 மிஷன் என்பது ஹூஸ்டனை தளமாக கொண்ட ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசா இடையே இருக்கும் ஒரு வணிக முயற்சி ஆகும். இந்திய தரப்பில் இந்திய விண்வெளி வீரரை இதில் பயணம் மேற்கொள்ள சுமார் 550 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மிஷன் ஆகாஷ் கங்கா என்றும் அழைக்கப்படும் இந்த மிஷன் ஜூன் 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்தியா அமெரிக்கா கூட்டு அறிக்கையின் ஒரு முயற்சியாகும்

Follow Us