AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்வெளி மையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா.. இந்தியா படைத்த சாதனை!

Axiom 4 Mission Shubhanshu Shukla : இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் சுபான்ஷு சுக்லா. முன்னதாக, இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றிருந்தார்.

விண்வெளி மையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா.. இந்தியா படைத்த சாதனை!
சுபான்ஷு சுக்லாImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 17:01 PM IST

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (Shubhanshu Shukla) உள்பட 4 வீரர்கள் சென்றடைந்துள்ளனர்.  தற்போது, சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சென்ற  டிராகன் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ளது.  இன்னும் சில மணி நேரங்களில் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்குள் கால் எடுத்து வைப்பார் என கூறப்படுகிறது. ஆக்சியம் 4 மிஷன் (Axiom 4 Mission) திட்டத்தை இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, போலாந்தின் போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு , அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் பெக்கி விட்சன் ஆகியோர் டிராகன் விண்கலம் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வசேத விண்வெளி நிலையத்திற்கு 2025 ஜூன் 25ஆம் தேதி மதியம் 12 மணியளவில் புறப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா

2025 ஜூன் 26ஆம் தேதியான நேற்று ஃப்ளோரிடாவில் இருக்கக்கூடிய கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  டிராகன் விண்கலம் பால்கன் 9 ராக்கெட் மூலம் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் மதியம் 12 மணியளவில் புறப்பட்டனர். சுமார் 28 மணி நேரம் பயணத்திற்கு பிறகு, 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இணைக்கப்பட்ட டிராகன் விண்கலன் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்த சில மணி நேரங்கள் ஆகும். இதனால், சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்களும் இன்னும் சில மணி நேரங்களில் விண்வெளி மையத்திற்கு உள்ளே காலடி எடுத்து வைப்பார்கள். சரியாக மாலை 6 மணிக்கு விண்வெளி மையத்திற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

நாசா அறிவிப்பு

விண்வெளியில் 14 நாட்கள் ஆய்வு

சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு நிலையத்திறகு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்று விங் கமாண்டர் ராகேஷ் சர்மா சென்றிருந்தார். இப்போது, சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களுக்கு விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். விண்வெளியில் 60 அறிவியல் பரிசோதனை, 31 வெளி நடவடிக்கையில் 4 பேரும் ஈடுபட உள்ளனர். குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகள் செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சிகள் நடக்க உள்ளது.

 

Follow Us