AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

NATO : ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு.. முக்கிய நடவடிக்கை!

NATO Annual Conference in Netherland | அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் அங்கம் கொண்டுள்ள நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரத்தில் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்கவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

NATO : ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு.. முக்கிய நடவடிக்கை!
நேட்டோ மாநாடு
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jun 2025 06:58 AM IST

நெதர்லாந்து, ஜூன் 26 : ராணுவ பலத்தை (Army Force) அதிகரிக்க நேட்டோ (NATO – The North Atlantic Treaty Organization) நாடுகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்கா (America) உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு (NATO Annual Conference) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் (The Hack City in Netherland) நடைபெற்ற நிலையில், அதில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேட்டோ மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நெதர்லாந்தில் நடைபெற்ற நேட்டோ வருடாந்திர மாநாடு

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் அங்கம் கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நேட்டோ மாநாடு நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் நடைபெற்றது. உலக அளவில் நிகழ்ந்து வந்த பல்வேறு பதற்றங்களுக்கு மற்றும் அசாதாரனமான சூழலுக்கு பிறகு இந்த மாநாடு நடத்தப்பட்டதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அந்த வகையில் இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ராணுவத்தை பலப்படுத்த முடிவு செய்த நேட்டோ அமைப்பு

இந்த நேட்டோ மாநாட்டில், நாடுகளின் ராணுவ செலவினத்தை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக உறுப்பு நாடுகள் தங்களது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ராணுவத்திறகாக பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டிரம்பின் இந்த பரிந்துரைக்கு நேட்டோ உறுப்பு நாடுகளும் ஓப்புதல் அளித்த நிலையில், ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு மாநாட்டின் முடிவில் அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படடது குறிப்பிடத்தக்கது.

Follow Us