அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. டிரம்புடன் முக்கிய மீட்டிங்? என்ன மேட்டர்?

PM Modi US Visit : 2025 செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் டிரப்பை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. டிரம்புடன் முக்கிய மீட்டிங்? என்ன மேட்டர்?

பிரதமர் மோடி - டிரம்ப்

Updated On: 

13 Aug 2025 09:04 AM

டெல்லி, ஆகஸ்ட் 13 : 2025 செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி (PM Modi US Visit) அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் டிரப்பை  (US President Donald Trump) சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவும் வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்த டிரம்ப், அதன்பிறகு, மேலும் 25 சதவீத வரியை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலே இந்த வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையே வர்த்த மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தியப் பொருட்கள் மீதான டிரம்பின் 50% வரிகளில் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி 35 சதவீத அமலுக்கு வந்த நிலையில், மீதமுள்ள வரி 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்குள், இந்தியா அமெரிக்காவும் வர்த்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இப்படியான சூழலில், பிரதமர் மோடி 2025 செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Also Read : அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசாங்கம்..!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக் கூட்டம் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த .நா சபையின் விவாதம் 2025 செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும்.

டிரம்புடன் முக்கிய மீட்டிங்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025 செப்டம்பர் 23 ஆம் தேதி உலகத் தலைவர்களுக்கு மத்தியில் ஐ.நா. பொதுச் சபை மேடையில் இருந்து உரையாற்றுவார். பொதுச் சபையின் 80வது அமர்வின் உயர்மட்ட விவாதத்திற்கான பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலின்படி, இந்தியா 2025 செப்டம்பர் 26ஆம் தேதி உரையாற்றுகிறது.

எனவே, அன்றைய தினத்தில் பிரதமர் மோடி உரையாற்றலாம் என கூறப்படுகிறது. இதோடு, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் உரையாற்றும். இதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, அமெரிக்க அதிபர் டிரப்பையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : 24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் மோடி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதன் மூலம், பிரதமர் மோடி 2025ஆம் ஆண்டில் மட்டுமே இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.