ரயில் பயணத்தின் போது தாமதம் காரணமாக ரயிலை தவறவிடுவது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. இப்படி ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வி பயணிகளிடம் எழுகிறது. ரயில்வே விதிகளின்படி, ஸ்லீப்பர், ஏசி போன்ற முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் அடுத்த ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை. அந்த டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணம் செய்தால், அது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.