10 நிமிடத்தில் 36 கிலோ மீட்டர் பயணம்… வருகிறது ஏர் டாக்ஸி சேவை… எங்கு தெரியுமா!
Dubai Air Taxi Service: துபாயில் இந்த ஆண்டுக்குள் ஏர் டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏர் டாக்ஸிடானது மணிக்கு சுமார் 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதில், 36 கிலோ மீட்டர் தொலைவை 10 நிமிடங்களில் கடக்கலாம்.
துபாயில் ஏர் டாக்ஸி சேவை இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், அந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் நகரம் முழுவதும் முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பாகவும், வேகமாகவும், வசதியுடனும் பயணம் செய்ய முடியும். இந்த பயணம் முறையான ஏர் டாக்ஸி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பாம் ஜுமேராவுக்கு வெறும் 10 நிமிடங்களில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு இடங்களுக்கு இடையேயான தூரம் சுமார் 36 கிலோ மீட்டர் ஆகும். இந்த வழித்தடத்தில் காரில் சென்றால் சுமார் 45 நிமிடங்கள் ஆகும். ஜோலி ஏவியேஷன் நிறுவனத்தால் இந்த விமான டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், ஜோபி ஏவியேஷனுடன் இணைந்து, முதன் முதலில் பணியாளர்களுடன் கூடிய மின்சார செங்குத்து டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் சேவையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது.
மின்சார ஏர் டாக்ஸி சோதனை ஓட்டம்
கடந்த 2025 ஆம் ஆண்டு மார்காமில் உள்ள ஜோபியின் சோதனை வசதியில் இருந்து புறப்பட்ட இந்த மின்சார வான்வழி டாக்ஸி, தொடர்ந்து 17 நிமிடங்கள் பறந்து சென்று, பின்னர் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை தொடர்ந்து, துபாய் ஆர் டி ஏ-இன் நிர்வாக இயக்குனர்கள் குழுவின் தலைவரான அல் தாயர், 2026 ஆம் ஆண்டில் வான்வெளி டாக்ஸி சேவையை வணிக ரீதியாக தொடங்குவதை நோக்கி நிறுவனம் சீராக முன்னேறி வருவதாக கூறினார்.
மேலும் படிக்க: எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!




4 இடங்களில் இருந்து செயல்படும் ஏர் டாக்ஸி சேவை
இது எதிர்கால நகரமாகவும், புதுமையான மற்றும் நிலையான நகர்ப்புற இயக்க தீர்வுகளுக்கான உலகளாவிய மையமாகவும் துபாயின் நிலையே உறுதிப்படுத்தும், திறமையான உள்கட்டமைப்பை உயர்தர வாழ்க்கையுடன் இணைக்கும் என்று அல் தாயர் கூறியிருந்தார். ஆரம்பத்தில், துபாய் ஏர் டாக்ஸி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகிலுள்ள 4 இடங்களில் இருந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதில், டவுன் டவுன் துபாய், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமேரா ஆகியவை அடங்கும்.
பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள்
இந்த இடங்களில் உள்ள கட்டமைப்புகள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் 2 பிரத்தியேக மண்டலங்கள், பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி மற்றும் டாக்ஸிகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் ஆகியவை அமைந்துள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 42,000 தரையிறக்கங்களை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த டிசம்பர் 2024 ஆம் ஆண்டு ஆர்டிஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த டாக்ஸி மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையது.
மேலும் படிக்க: ஏலியன்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவு!