Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

துபாயில் ஸ்கூபா டைவிங் செய்த இந்திய இளைஞர் பலி.. சோக சம்பவம்!

Dubai Scuba Diving Death | ஸ்கூபா டைவிங் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் ஆபத்துக்களும் உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ஸ்கூபா டைவிங் செய்கின்றனர். இந்த நிலையில், துபாயில் ஸ்கூபா டைவிங் செய்த இந்திய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் ஸ்கூபா டைவிங் செய்த இந்திய இளைஞர் பலி.. சோக சம்பவம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 09 Jun 2025 13:46 PM

துபாய், ஜூன் 09 : துபாயில் (Dubai) ஸ்கூபா டைவிங் (Scooba Diving) செய்தபோது இந்திய இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த அந்த இளைஞர் பக்ரீத் விடுமுறையை தனது குடும்பத்தினர் உடன் கழிப்பதற்காக சென்ற நிலையில், இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், துபாயில் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் ஸ்கூபா டைவிங் செய்த இந்திய இளைஞர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள சாகச செயலாகும். அதாவது, கடலுக்கு அடியில் சென்று வருவது தான் இந்த ஸ்கூபா டைவிங். தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டாலே மூச்சு திணறும் அபாயம் உள்ள நிலையில், ஆழ்கடலுக்கு சென்று வருவது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. நன்கு பயிற்ச்சி பெற்ற நபர்களுக்கு கூட அது மிகவுக் சவாலான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் தான், கடலுக்கு அடியில் செல்ல ஸ்கூபா டைவிங் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அதற்கான பிரத்யேக உடை ஆகியவை வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, ஸ்கூபா டைவிங் செய்யும் நபர்கள் உடன் பாதுகாவலரும் சென்று வருவர். இருப்பினும் சில சமயங்களில் இது ஆபத்தாக மாறி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்கூபா டைவிங் செய்த இளைஞர் பலி – சோக சம்பவம்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஐசக் பால் என்ற இளைஞர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி வந்துள்ளார். அப்போது, துபாயின் ஜுமேரா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்துள்ளார். அப்போது நீருக்குள் அவரால் மூச்சு விட முடியாமல் போன நிலையில், அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சென்ற இளைஞர் ஸ்கூபா டைவிங்கின் போது மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...