Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும்.. பாபா வங்கா பகீர் கணிப்பு – ஜப்பான் பயணத்தை ரத்து செய்யும் மக்கள்!

Baba Vanga Prediction July 2025 : 2025 ஜூலை மாதம் ஜப்பானை மிகப்பெரிய சுனாமி அல்லது பூகம்பம் தாக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். இது மக்களிடையே பீதியடைய வைத்துள்ளது. இதனால், மக்கள் பலரும் தங்கள் ஜப்பான் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும்.. பாபா வங்கா பகீர் கணிப்பு – ஜப்பான் பயணத்தை ரத்து செய்யும் மக்கள்!
பாபா வங்காImage Source: TV9/pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Jun 2025 11:10 AM

ஜப்பான், ஜூன் 05 : ஜப்பான் நாட்டை 2025 ஜூலை மாதம் பெயரி சுனாமி தாக்குதல் என பாபா வங்கா (baba vanga prediction) கணித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் தங்கள் சுற்றுலா பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த ரியோ டாட்சுகி புதிய பாபா வங்கா என்று அழைக்கப்படுகிறார். இவர் 2025 ஜூலை மாதம் ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கும் என்று கணித்துள்ளார். ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான கடலுக்கு அடியில் ஏற்பட்ட பிளவு காரணமாக சுனாமி அல்லது பூகம்பம் ஜப்பானை தாக்கும் என கணித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி அந்நாடு பெரும் சிக்கல்களை எதிர்கொண்டது. இந்த பேரழிவால் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும்

என்டிடிவி தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தை டாட்சுகி துல்லியமாக கணிந்திருந்தார்.  இதனால், தற்போது அவர் 2025 ஜூலை மாதம் ஜப்பானை சுனாமி தாக்குதல் என அவர் கணித்திருப்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இவரது கணிப்பால் ஜப்பானுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும், அனைவரும் தங்களது பயணத்தை ரத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜப்பானுக்கான விமான முன்பதிவுகள் 83 சதவீதம் குறைந்துளளது. ப்ளூம்பெர்க் உளவுத்துறையின் கூற்றுப்படி, ஹாங்காங்கிலிருந்து சராசரி முன்பதிவுகள் ஆண்டுக்கு 50 சதவீதம் குறைந்துள்ளன.

ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை தொடக்கத்தில் முன்பதிவுகள் 83 சதவீதம வரை சரிந்துள்ளன. ஏப்ரல் – மே மாதங்களில் மட்டும் ஜப்பானுக்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிகிறது. டாட்சுகியின் கணிப்பால் மக்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

ஜப்பான் பயணத்தை ரத்து செய்யும் மக்கள்

ரியோ டாட்சுகியின் கணிப்புகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாதவை என்றும் கூறி, அவற்றைப் புறக்கணிக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறுகையில், “சமூக ஊடகங்களில் அறிவியல் ரீதியான வதந்திகள் பரவுவது சுற்றுலாவைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும்.

ஜப்பான் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையில்லை. மக்கள் வதந்திகளை புறக்கணித்துவிட்டு ஜப்பானுக்கு வருகை தர வேண்டும்” என்று கூறினார். இருப்பினும், டாட்சுகியின் கணிப்புகளால் ஜப்பான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் 2,98,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என அண்மையில் ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அது எப்போது நடக்கும் என தகவல் இல்லை.  எனவே, மக்கள் பலரும் டாக்ட்சி கணிப்பால் ஜப்பானுக்கு செல்வதை ஒத்திவைத்து வருகின்றனர். இது ஜப்பான் அரசுக்கு நிதி ரீதியாக பெரிய தலைவலியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.