Tsunami : அமெரிக்காவை தாக்க உள்ள 1,000 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய சுனாமி.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Massive Tsunami Threat to America | சமீப காலமாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவை மிகப்பெரிய சுனாமி தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த சுனாமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், சுனாமி அலை ஏற்படும் பகுதிகளில் இருக்கும் மக்கள் தப்பிக்க முடியாத வகையில் அதன் தாக்கம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்கா, மே 23 : அமெரிக்காவை (America) மிகப்பெரிய சுனாமி அலை (Huge Tsunami Wave) தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சமீப காலமாகவே உலகின் பலவேறு பகுதிகளில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி ஏற்பட்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை குறித்து விஞ்ஞானிகள் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவை தாக்க உள்ள மிகப்பெரிய சுனாமி – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை மிகப்பெரிய சுனாமி தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காஸ்கேடியா துணை பிரிவு மண்டலத்தில் ஏற்பட உள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம், அமெரிக்காவில் மிகப்பெரிய சுனாமியை உருவாக்க கூடும் என்று தேசிய அறிவியல் அகாடமியால் வெளியிடப்பட்ட வர்ஜீனியா டெக் புவியியலாளர்களின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில் 8.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு
காஸ்கேடியா துணை பிரிவு மண்டலம் வடக்கு கலிஃபோர்னியாவில் இருந்து கொலம்பியா வரை நீண்டு இருக்கும் சுமார் 600 மைல் பிளவு கோடாகும். இதில் ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக தான் சுனாமி தாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆய்வில் கூறப்பட்டுள்ள படி, 8 ரிக்டருக்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் அது அமெரிக்காவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
சுமார் 1,000 அடி வரை சுனாமி அலை எழும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பொதுவாக நிலநடுக்கம் ஏற்பட்டால் தோன்றும் சாதாரன சுனாமியாக இல்லாமல் அடுத்த 15 நிமிடங்களிலேயே சுமார் 1,000 அடி உயரத்திற்கு அலை எழ கூடிய சுனாமியாக அது இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இத்தகைய ராட்சத சுனாமி அலை எழும் நிலையில், மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெறும் 15 நிமிடங்கள் மட்டுமேம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய மிகப்பெரிய சுனாமி அலைகள் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் விண்கல் மோதல்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான இயற்கை பேரழிவுகளை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை பெரிய அளவிலான சுனாமி தாக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அது பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழுத்தியுள்ளது.