Viral Video : காசா மீது தாக்குதல் நடத்தி Gender Reveal Party ராணுவ வீரர்!
Israeli Soldier's Shocking Gender Reveal | இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் காசா கட்டடம் மீது தாக்குதல் நடத்தி தனது குழந்தையின் பாலினத்தை அறிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் (Social Medias) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தினமும் ஒவ்வொரு வகையான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) போர் வீரர் வெடி குண்டு தாக்குதல் நடத்தி தனது குழந்தையின் பாலினத்தை அறிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைராகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
காசா மீது தாக்குதல் நடத்தி குழந்தையின் பாலினத்தை அறிவித்த ராணுவ வீரர்
மேற்கத்திய நாடுகளில் தாய் கருவுற்றதுமே வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என அவர்களுக்கு அறிவிக்கப்படும். அதனை தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவிக்கும் வகையில் Gender Reveal Party-ஐ கொண்டாடுவர். இதில் பிங் மற்றும் நீலம் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்படும். அதாவது பிங் என்றால் பெண் குழந்தை என்றும் நீலம் என்றால் ஆண் குழந்தை என்றும் பொருள். இதற்காக இந்த இரண்டு நிறங்களிலான பலூன்கள், பட்டாசுக்களை வெடித்து தங்களது குழந்தைகளின் பாலினத்தை அறிவிப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இஸ்ரேல் ராணுவ வீர்ர ஒருவர் தனது குழந்தையில் பாலினத்தை அறிவிக்கும் வகையில், காசாவின் கட்டிடம் ஒன்றில் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மிசைல் உடன் நீல நிற பெயிண்ட் கலந்து அவர் தாக்குதல் நடத்திய நிலையில், கட்டடம் வெடித்து சிதறிய போது நீல நிறத்தில் புகை வந்துள்ளது. அதனை பார்க்கும் சக ராணுவ வீரர்கள் ஆண் குழந்தை என மகிழ்ச்சியில் கத்துகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ
⚡️🇮🇱JUST IN:
In a new display of depravity, the Israeli occupation army held a “gender reveal party” by blowing up residential buildings and using the explosion’s color to reveal the gender of a newborn Israeli baby.
Credit: @maya00o23 pic.twitter.com/LS6pv98yHZ
— Suppressed News. (@SuppressedNws) May 4, 2025
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பல உயிர்களை கொலை செய்துவிட்டு ஒரு குழந்தையின் பிறப்பை கொண்டாடுவதா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.