சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில், மருத்துவ உலகில் மிக அரிதான சம்பவம் நடந்துள்ளது. 40 வயது ஆண் ஒருவரின் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளமான கரோட்டிட் ஆர்டரி தானாகவே கிழிந்த நிலையில், சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். உலக மருத்துவ இதழ்களில் இதுவரை 10 சம்பவங்கள் மட்டுமே இதுபோன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் வீட்டில் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தொண்டையில் கடும் வலி ஏற்பட்டு, சில நிமிடங்களிலேயே கழுத்து முழுவதும் வீக்கம் பரவி, அவர் மயங்கி விழுந்துள்ளார்.