உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் நடந்த செல்போன் திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் அங்கிதா குப்தா, தனது குடும்பத்துடன் வாரணாசி அஸ்ஸி காட் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் அவரது செல்போன் மர்ம நபரால் பறிக்கப்பட்டது.