பெங்களூருவில், போக்குவரத்து சோதனையின் போது இருசக்கர வாகன ஓட்டுநரை ஒரு டிராஃபிக் போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, போலீஸ் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில்க் போர்டு பாலத்தின் கீழ், ஒருவழிச்சாலையில் தவறாக சென்றதாக கூறி, ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தினர். மாடிவாலா போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் மல்லிகார்ஜுனா தெலி, அந்த வாகன ஓட்டுநரிடம் அபராதம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.