Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : மனதில் பாரம்.. தோல்களில் சுமை.. இணையத்தை கலங்க செய்த இளைஞரின் வீடியோ!

Common Man Struggling To Get In Train | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒருவர் தோல்களில் கடும் சுமையுடன் ரயில் ஏற முயற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மனதில் பாரம்.. தோல்களில் சுமை.. இணையத்தை கலங்க செய்த இளைஞரின் வீடியோ!
வைரல் விடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jan 2026 23:49 PM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளைஞர் ஒருவர் கூட்டம் மிகுந்த ரயிலில் ஏற சிரமப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து பலரும் மனம் வருந்தி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் ஏற சிரமப்படும் இளைஞர்

மனிதர்களுக்குன் பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பொருளாதாரத்தை உருவாக்க, தங்களது பண தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பலரும் பல வேலைகளை செய்கின்றனர். சிலர் நன்கு படித்து நல்ல பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து தங்களது வாழ்க்கையை எந்த வித சிக்கல்களும் இன்றி வாழ்கின்றனர். ஆனால், சிலரோ போதிய கல்வி தகுதி, முறையான வேலை இல்லாமல் வருமையின் பிடியில் சிக்கி தவிப்பர். இத்தகைய சூழலில் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் உள்ளத்தில் கடமைகளை சுமந்துக்கொண்டு, தோல்களில் பைகளை சுமந்துக்கொண்டு ரயில் ஏற முயற்சி செய்யும் ஒரு நபரின் வீடியோ இணையத்தை கலக்கமடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நோயாளியை மிக கடுமையாக தாக்கிய மருத்துவர்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ