Viral Video : நோயாளியை மிக கடுமையாக தாக்கிய மருத்துவர்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!
Doctor Beating Patient Brutally In Arunachal Pradesh | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், மருத்துவர் ஒருவர் நோயாளியை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் உலகத்தின் எந்த மூளையில் ஏதேனும் வித்தியாசமான மற்றும் தண்டனைக்குரிய சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பாக உலகிற்கு மிக எளிதாக தெரிய வந்துவிடும். பெரும்பாலான சம்பவங்களில் இணையத்தில் வைரலான வீடியோக்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், மருத்துவர் ஒருவர் நோயாளியை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நோயாளியை கடுமையாக தாக்கிய மருத்துவர்
அருணாச்சல பிரதேசம், ஷிம்லா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் நோயாளியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த மருத்துவர் மீது காவல்துறை நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : சாலையில் வாகனங்களே இல்லை.. அதிகாலை 4 மணிக்கும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் மக்கள்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Doctor thrashing a patient in IGMC Shimla.
— International Relations (@Intl_Relations0) December 22, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் படுத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அவருக்கு அருகில் நின்றுக்கொண்டு இருந்த மருத்துவர் அவரை மிக கடுமையாக தாக்குகிறார். அவரை அங்கிருக்கும் பலர் இணைந்து தடுக்கின்றனர். ஆனால், அவர் விடாமல் அந்த நோயாளியை மிக கடுமையாக தாக்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநரா.. இளம் பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!
மரியாதையாக பேச கூறியதால் ஆத்திரமடைந்த மருத்துவர் தன்னை கடுமையாக தாக்கியதாக அந்த நபர் கூறியுள்ளார்.