Viral Video : இப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநரா.. இளம் பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!
Bengaluru Auto Driver's Message | பெங்களூரில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த ஆட்டோவில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. காரணம், இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள், நகை பரிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்வதற்கு தயங்குகின்றனர். இருப்பினும் பணி சூழல்கள் காரணமாக சில பெண்கள் இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இரவு 12 மணிக்கு ஆட்டோவில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் – வீடியோ வெளியிட்ட பெண்
பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் விதமாக காவல்துறையினர் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து, மொபைல் செயலி என பல வகையான பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் ஒவ்வொரு தனி மனிதரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட கூடாது என முடிவு செய்யும்போது தான் பெண்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும். அந்த வகையில், பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : போர் அடிக்குது, வேளைய விடப்போறேன்.. ஜென்சி இளைஞர் போட்ட வீடியோ வைரல்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஆட்டோவில் பயணிக்கும் பெண் ஒருவர் தான் இரவு 12 மணிக்கு பயணம் செய்வதாக கூறியுள்ளார். அப்போது அந்த பெண் ஆட்டோவில் இருக்கும் சில வார்த்தைகளை காட்டுகிறார். அதில் நான் தகப்பன், சாகோதரனும் கூட. உங்களின் பாதுகாப்பு முக்கியம். சவுகரியமாக அமர்ந்துக்கொள்ளுங்கள் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதனை படித்து காட்டும் அந்த பெண் நான் தற்போது பாதுகாப்பாக உணருகிறேன் என்று கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : அமெரிக்க் வீதியை ஆக்கிரமித்த இந்திய கடைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.