Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நாய் கடித்ததை தட்டி கேட்ட பெண்.. கன்னத்தில் அறைந்த உரிமையாளர்.. ஷாக் வீடியோ!

Woman Got Bitten By Dog | இணையத்தில் சில கொடூரமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவரை நாய் கடித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை நாயின் உரிமையாளர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : நாய் கடித்ததை தட்டி கேட்ட பெண்.. கன்னத்தில் அறைந்த உரிமையாளர்.. ஷாக் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Dec 2025 19:54 PM IST

நாய்களால் ஏற்படும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தெரு நாய்கள் மட்டுமன்றி வீட்டில் வளர்க்கும் நாய்களாலும் பிரச்னை வருகிறது. அந்த வகையில் தன்னை நாய் கடித்ததால் தட்டி கேட்ட பெண்ணை அந்த நாயின் உரிமையாளர் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் 40940 அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்ணை கடித்த நாய்

இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே நாய்களுக்கு ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக சிலரும் பேசி வருகின்றனர். இதற்கு இடையே தான் நாய்களால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தான் பெண்ணை நாய் கடிக்கும் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் மேலே மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறார். அவருக்கு பின்னால் மற்றொரு பெண் இறங்கி வருகிறார். அப்போது கீழே இருந்து இளைஞர் ஒருவர் நாயை அழைத்துக்கொண்டு வருகிறார். அந்த நாய் இரண்டாவதாக வந்த பெண்ணை கடிக்கிறது. அதனை அந்த பெண் தட்டி கேட்ட நிலையில், அந்த நாயின் உரிமையாளரான மற்றொரு பெண் அந்த பெண்ணை அடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.