Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்.. வைரலாகும் வீடியோ!

Woman Cooks Maggi on Train with Kettle | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Nov 2025 22:24 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். சிலர் செய்யும் சட்ட விரோதமான செயல்கள் மற்றும் ஆபத்தான செயல்களும் இணையத்தில் வைரலாகும். அந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து போலீசார் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்வது தொடர்பான சம்பவங்களும் நடைபெறும். அந்த வகையில், பெண் ஒருவர் ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் (Electric Kettle) பயன்படுத்தி மேகி சமைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தி மேகி சமைத்த நபர்

இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் பெண் ஒருவர் அங்கு இருக்கும் சார்ஜிங் போர்ட்டை பயன்படுத்தி கெட்டில் மூலம் மேகி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஒரு நாளில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் மோமோஸ் கடைக்காரர்.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கெட்டில் மூலம் மேகி சமைத்துக்கொண்டு இருக்கும்  அந்த பெண், தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு மேகி செய்து கொடுத்ததாக கூறுகிறார். எனக்கு விடுமுறையே இல்லை. எனது சமையளறை தற்போது பணி செய்துக்கொண்டு இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : மேம்பாலத்தின் மீது படுத்திருந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.