Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : அமெரிக்க் வீதியை ஆக்கிரமித்த இந்திய கடைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Indian Stores in USA's Texas Dallas | இந்தியாவில் இருக்கும் ஏராளமான நபர்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் வசிக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் இந்தியாவில் உள்ளதை போலவே அங்கும் கடைகளை திறக்கின்றனர். அது தொடர்பான வீடியோ ஒன்றை தான் ஒரு வெளிநாட்டவர் பதிவிட்டுள்ளார்.

Viral Video : அமெரிக்க் வீதியை ஆக்கிரமித்த இந்திய கடைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Dec 2025 20:14 PM IST

இந்தியாவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வேலை, படிப்பு, வாழ்வாதாரம் என பல தேவைகளுக்காக அவர்கள் பல உலக நாடுகளுக்கு செல்கின்றனர். என்னதான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாலும், இந்தியாவையும், இந்தியாவுடன் தொடர்புடைய விஷயங்களையும் அவர்களால் மறக்கவே முடிவதில்லை. இதற்காக வெளிநாடுகளில் வாழ்க்கை அமைத்துக்கொண்ட சிலர் இந்தியர்களுக்கான கடைகளை அங்கு திறக்கின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் இருக்கும் இந்திய கடைகள் குறித்து வெளிநாட்டவர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க வீதியை ஆக்கரமித்த இந்திய கடைகள்

இந்தியாவில் பெரும்பாலான நபர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். சிறந்த வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதால் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றதும் இந்திய உணவு, உடை, கலாச்சாரம் ஆகியவற்றை அவர்களால் மறக்க முடிவதில்லை. இதன் காரணமாக அவர்கள் அங்கேயே இந்திய பாரம்பரியத்தை மையப்படுத்திய உணவகங்கள், புடவை கடைகள் என திறக்கின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் அங்கு சென்று அந்த பொருட்களை வாங்குகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதி முழுவதும் இந்திய கடைகள் நிறைந்திருப்பது குறித்து ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video :மகளின் சங்கீத்தில் தந்தை கூல் டான்ஸ்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Pigeon Vizion (@pigeonvizion)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள வெளிநாட்டவர் ஒருவர், நாங்கள் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் உள்ளோம். இது இந்தியாவை போல உள்ளது. எங்கு பார்த்தாலும் இந்திய கடைகள் தான் உள்ளன என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.