Viral Video :மகளின் சங்கீத்தில் தந்தை கூல் டான்ஸ்.. வைரல் வீடியோ!
Father Danced At Daughter's Sangeet Function | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், மகளின் சங்கீத் விழாவில் தந்தை ஒருவர் ஸ்டைலாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக உலகின் எந்த மூலையில் என்ன சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றாலும் அது மிக விரைவாக இணையத்தில் வைரலாக தொடங்குகிறது. சில சமயங்களில் ஒரு சாதாரன சம்பவம் தொடர்பான வீடியோக்களும் கூட இணையத்தில் திடீரென வைரலாக தொடங்கும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது மகளின் சங்கீத் நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளின் சங்கீத் நிகழ்ச்சியில் உற்சாக நடனமாடிய தந்தை
இந்திய கலாச்சாரத்தில் திருமணம் ஒரு மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளின் திருமணம் என்றால் அது உணர்வு கலந்த திருவிழாவாக மாறிவிடுகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆசைக்காக அவர்களது பெரிய நாளில் அவர்கள் கேட்பதை எல்லாம் செய்வர். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தில் ஸ்டைலாக நடனமாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.




இதையும் படிங்க : Viral Video : ஒரு நாளில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் மோமோஸ் கடைக்காரர்.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோவில் அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது அந்த பெண்ணின் தந்தை நடனமாடுகிறார். அவர் வழக்கமான நடனத்தை போல மிகவும் மெதுவாக அசைந்து வித்தியாசமாக ஆடுகிறார். அவர் நடனமாடுவதை திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் மிகவும் உற்சாகத்துடன் ரசிக்கின்றனர். இவை அனைத்து அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மேம்பாலத்தின் மீது படுத்திருந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், மகள்களுக்காக தந்தைகள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் மிகவும் அழகான வீடியோ இதுதான் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.