Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பால்கனியில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்.. காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்!

Blinkit Delivery Agents Rescued Young Men | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிளிங்கிட் டெலிவரி ஊழியர் ஒருவர் பால்கனியில் சிக்கிக்கொண்ட இளைஞர்களை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பால்கனியில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்.. காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jan 2026 00:40 AM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு வைரலாகும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் விதமாகவும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், வீட்டின் பால்கனியில்  சிக்கிக்கொண்ட இரண்டு இளைஞர்களை பிளிங்கிட் (Blinkit) டெலிவரி ஊழியர் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வாருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பால்கனியில் சிக்கிக்கொண்ட இளைஞர்களை காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்

பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தி அவர்களுக்கு தேவையான பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள்ளாகவே வழங்கும் சேவையை பிளிங்கிட் நிறுவனம் வழங்கி வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாழும் ஏராளமான பொதுமக்கள் அதன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிளிங்கிட் ஊழியர் ஒருவர் பால்கனியில் சிக்கிக்கொண்ட இரண்டு இளைஞர்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video: காரை இயக்கும் 4 வயது சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Mihir Gahukar (@mihteeor)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் வீட்டின் பால்கனியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் விட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், அவர்கள் வெளியே சிக்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதன் காரணமாக யாரை உதவிக்கு அழைப்பது என யோசித்து முடிவு செய்த அந்த இளைஞர்கள் பிளிங்கிட்டில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். உணவு டெலிவரி ஊழியர் உணவை கொண்டு வந்ததும் அவர்கள் தாங்கள் வெளியே சிக்கிக்கொண்டது குறித்து தெரிவித்து உதவி கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video: காரை இயக்கும் 4 வயது சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

அந்த இளைஞர்கள் கூறியபடி உணவு டெலிவரி ஊழியர் அவர்களுக்கு உதவி செய்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.