உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்கள் மெதுவாக நிலத்துக்குள் சென்றுகொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாம் வாழும் வீடுகள், சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சில சென்டிமீட்டர் அளவுக்கு கீழே இறங்கிக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்டா மிக வேகமாக மூழ்கும் நகரங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது; அங்கு அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சுதல், கனமான கட்டிடங்கள் மற்றும் அதிகரிக்கும் மழை காரணமாக நகரத்தின் பெரும் பகுதி ஏற்கனவே கடல் மட்டத்துக்கு கீழே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.