இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் இடத்தில் உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுதவிர விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதிக அளவிலான மக்கள் இந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையை பெற்று வரும் நிலையில், அவை முக்கிய இடங்களை பிடித்துள்ளன.