Viral Video : கட்டிப்பிடிக்க வேண்டும்.. கொரியா பெண்களிடம் ஆசையை கூறிய இளைஞர்.. வலுக்கும் கண்டனம்!
Indian Man's Inappropriate Behavior Sparks Debate | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் கொரியா பெண்களிடம் தகாத முறையில் நடந்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் எதிர்ப்புகளை பெற்று வருகிறது.

இந்தியா பன்முகத்தன்மை, பல்வேறுபட்ட கலாச்சாரம் ஆகிய பல சிறப்புகளை கொண்டுள்ளதன் காரணமாக ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவர். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா எப்படி புதியதோ அதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியர்களுக்கு மிகவும் வித்தியாசமானவரகளாக தோன்றுவார்கள். இதன் காரணமாக அவர்களுடன் சென்று பேசுவது, புகைப்படங்களை எடுப்பது ஆகியவற்றை செய்வர். அந்த வகையில், இளைஞர் ஒருவர் கொரியா பெண்களை சந்தித்து பேசியது வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
கட்டிப்பிடிக்க வேண்டும் – கொரியா பெண்களிடம் ஆசையை கூறிய இளைஞர்
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் இந்தியர்கள் விளையாட்டாக பேசுவது, பாடல் பாடுவது, நடனமாடுவது உள்ளிட்டவற்றை செய்வர். அவர்கள் அவ்வாறு செய்யும் வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகும். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கொரியா பெண்களிடம் தவறாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஜேசிபி மூலம் செய்யப்பட்ட பிரம்மாண்ட சமையல்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இரண்டு கொரிய பெண்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் ஒரு இந்திய இளைஞர் சென்று பஞ்ச் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறுகிறார். அதனை கேட்டு அந்த பெணகள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக வீடியோ எடுக்கும் நபர் கையில் பஞ்ச் செய்ய வேண்டும் என்று அந்த நபர் விரும்புகிறார் என்று கூறுகிறார். உடனடியாக அந்த இரண்டு பெண்களும் அந்த நபரின் கைகளின் பஞ்ச் செய்கின்றனர். பிறகு கட்டிப்பிடிப்பது தனது கனவு என்று கூறுகிறார். உடனே அந்த பெண்கள் அந்த இளைஞரை கட்டிப்பிடிக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தெரு நாய்களுக்கு பயந்து கூரை மீது ஏறிய மாடு.. தெலங்கானாவில் பரபரப்பு!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பெண்களிடம் பாதுகாப்பாகவும், நாகரிகமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.