Viral Video : தெரு நாய்களுக்கு பயந்து கூரை மீது ஏறிய மாடு.. தெலங்கானாவில் பரபரப்பு!
Cow Climbs Roof to Escape From Dogs | இந்தியாவில் நாய்களால் ஏராளமான பிரச்னைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தெரு நாய்களுக்கு பயந்து மாடு ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி நிற்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தெரு நாய்களின் பிரச்னை ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. தெரு நாய்கள் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரையும் கொடூரமாக தாக்கும் சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தெரு நாய்களுக்கு பயந்து மாடு ஒன்று வீட்டின் கூரை மீது ஏறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே தெரு நாய்கள் தொடர்பான சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தெரு நாய்களுக்கு பயந்து கூரை மீது ஏறிய மாடு
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிராலா என்ற கிராமத்தில் வீட்டின் வெளியே மாடு ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளது. அப்போது திடீரென அந்த மாட்டை சில தெரு நாய்கள் கடிக்க முயன்றுள்ளன. இந்த நிலையில், தெரு நாய்களுக்கு பயந்து அந்த மாடு ஒரு வீட்டின் கூரை மீது ஏறி நின்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அருகே இருந்த கற்கள் மூலம் அந்த மாடு வீட்டின் கூரை மீது ஏறி நின்ற நிலையில், அது கீழே விழுந்து விபத்து ஏற்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. பிறகு சுமார் 6 மணி நேரம் கழித்து அந்த மாடு கூறையின் மீது இருந்து பத்திரமாக கீழே இறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : முட்டையில் மோனலிசா.. இப்படி ஒரு ஓவியமா?.. வியக்கும் நெட்டிசன்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
तेलंगाना के आदिलाबाद जिले के निराल गांव में एक अनोखी घटना देखने को मिली, जहां आवारा कुत्तों के झुंड से बचने के लिए एक सांड घर की छत पर चढ़ गया। अचानक हुए इस नजारे से ग्रामीण हैरान रह गए। बताया गया कि शेख गफूर नामक किसान का सांड कुत्तों के हमले से घबराकर रस्सी तोड़कर भागा और… pic.twitter.com/e6cCrhW7IA
— KHABAR FAST (@Khabarfast) September 16, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வெள்ளை நிற மாடு ஒன்று ஓடு கொண்டு கட்டப்பட்டுள்ள சிறிய வீட்டின் மேற்கூரை மீது நிற்கிறது. தான் உயரத்தில் நின்றுக்கொண்டு இருப்பதை உணர்ந்த அந்த மாடு எங்கேயும் அசையாமல் அப்படியே நிற்கிறது.