Viral Video : ஜெர்மனியை விட இந்தியாவில் இத்தனை சிறப்புகள் உள்ளன.. வெளிநாட்டு பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
German Tourist Video on Facilities in India | வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்த பெண் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் பெண் ஒருவர் இந்தியாவில் ஜெர்மனியை விட என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் சிறப்புகள் குறித்து வீடியோ பதிவிட்ட ஜெர்மன் பெண்
ஜெர்மனியில் இருந்து பெண் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அவ்வாறு சுற்றுலா வந்த அவர், இந்தியாவில் உள்ள சிறப்பு அம்சங்களை உற்று கவனித்துள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள வசதிகளை கண்டு வியப்படைந்த அந்த பெண், ஜெர்மனியில் இல்லாத பல விஷயங்கள் இந்தியாவில் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர்.. பெண்ணுக்கு முத்தமிட்டதால் சர்ச்சை.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அந்த பெண் ஜெர்மனிக்கும், இந்தியாவுக்கும் என்ன என்ன வித்தியாசம் உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவை உள்ளது, ஆற்றலை சேமிக்கும் மற்றும் பாதுகாப்பான சுவிட்சுகள், பணி இடங்களில் டிஜிட்டல் வருகை பதிவு இயந்திரங்கள், சைவ உணவுகள், சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கான தனி பிரிவு, நேரத்திற்கு வரும் ரயில்கள், மிக குறைந்த விலையில் ரயில் பயணம், ரயில்களில் பெண்களுக்கான சிறப்பு பெட்டிகள் என அவர் இந்தியா தன்னை ஈர்த்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : சிறுவனுக்கு புதிய சைக்கிள் பரிசளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. குவியும் பாராட்டு!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலர் அந்த வீடியோவுக்கு வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், பலர் அந்த பெண்ணின் கருத்துகளுக்கு எதிராக கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.