AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் காட்டு யானை.. வாகன ஓட்டிகள் அச்சம்!

Wild Elephant Wanders Coonoor - Mettuppalayam Road | வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றித் திரிகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் காட்டு யானை.. வாகன ஓட்டிகள் அச்சம்!
சாலையில் முகாமிட்டுள்ள யானை
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Aug 2026 07:34 AM IST

நீலகிரி, ஆகஸ்ட் 03 : குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிவதால் அந்த பகுதியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். உணவு, தண்ணீர் ஆகியவற்றை தேடி, வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் சாலைக்கு வருவது, விவசாய தோட்டங்களுக்கு வருவது மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்வது ஆகியவை தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான் இந்த காட்டு யானை வலம் வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்ணூர் – மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மரங்களில் பலாப்பழங்கள் காய்த்துள்ளன. இந்த பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக வழப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குன்னூர் – மேட்டுப்பாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள யானைகள் சாலையில் நடமாடி வருகின்றன.

இதையும் படிங்க : தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு – அமைச்சர் முக்கிய தகவல்

அதாவது, மரப்பாலம், குறும்பாடி, சின்ன குறும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை ஒன்று, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நடமாடி வருகிறது. இதன் காரணமாக யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் உதவி செய்து வருகின்றனர்.

சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்

இந்த நிலையில், காட்டு யானை ஒன்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக வாகன் ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானையை வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க : பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள யானையை காட்டுக்குள் விரட்டும் தீவிர பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us