Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கணவனை கொன்று கழிவறையில் குழிதோண்டி புதைத்த மனைவி.. பகீர் சம்பவம்!

Wife Killed Husband in Pudukkottai | புதுக்கோட்டையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கொலை செய்து கழிவறையில் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்று கழிவறையில் குழிதோண்டி புதைத்த மனைவி.. பகீர் சம்பவம்!
கொலை செய்யப்பட்டவர் மற்றும் கொலை செய்தவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Oct 2025 08:14 AM IST

புதுக்கோட்டை, அக்டோபர் 31 : புதுக்கோட்டை (Pudukkottai) மாவட்டம், மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. பெயிண்டரான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பழனிவேலுக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது கணவன் – மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நிலையில், இது தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

திடீரென காணாமல் போன பழனிவேல்

இந்த நிலையில், பழனிவேல் திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது சகோதரி மகாலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் உள்ள நிலையில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார். பழனிவேல் காணமால் போன நிலையில், அவரை தொடர்புக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அவரும் யாரையும் தொடர்ப்புக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : இரவில் வீட்டில் உறங்கியபோது தீ விபத்து.. பெண் பலி! செல்போன் சார்ஜர் காரணமா?

காவல் நிலையத்தில் புகார் அளித்த காவேரி

தனது சகோதரர் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த காவேரி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் மகாலட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மகாலட்சுமி தனது கணவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : 10 மாதங்களில் 415 டீனேஜ் பிரசவம்… 59 குழந்தை திருமணங்கள் – தமிழகத்தையே உலுக்கிய வேலூர்

மகள்களின் உதவியுடன் கொடூர சம்பவத்தை செய்த மகாலட்சுமி

இது குறித்து போலீசாரிடம் மகாலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, பழனிவேலுக்கும், எனக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் என்னை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் பழனிவேலை தாக்கியபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வீட்டின் அருகே இருந்த கழிவறையில் குழிதோண்டி அவரை புதைத்துவிட்டேன்.

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ்

பின்னர் எதுவும் தெரியாததுபோல் இருந்து வந்தேன். இந்த சம்பவத்தின் எனது இரண்டு மகள்களும் எனக்கு துணையாக இருந்தனர் என்று அவர் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மகாலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகள்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.