AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2031ல் விஜய்க்கு போட்டியே தனுஷ் தான்… திமுக, அதிமுக களத்திலேயே இருக்காது… ஜோதிடர் ரிக்கி ராதன் கணிப்பு

தனுஷ் அரசியலுக்கு வந்தால் வருகிற 2031 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் தனுஷ் இடையே தான் போட்டி இருக்கும் என முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2031ல் விஜய்க்கு போட்டியே தனுஷ் தான்… திமுக, அதிமுக களத்திலேயே இருக்காது… ஜோதிடர் ரிக்கி ராதன் கணிப்பு
நடிகர் தனுஷ் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jul 2026 13:43 PM IST

தனுஷ் அரசியலுக்கு வந்தால் வருகிற 2031 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் தனுஷ் இடையே தான் போட்டி இருக்கும் என முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய தனுஷ் , அரசியலுக்கு வருவதை மறைமுகமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அரசியலில் கால் வைக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக நிகழ்வில் பேசிய அவர், நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன் என பேசியிருந்தார். இது அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக அறிவித்ததாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய்யை பார்க்கணும்… 2000 கி.மீ நடந்தே வந்த உ.பி. இளைஞர் – வைரலாகும் வீடியோ

முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் கருத்தால் சர்ச்சை

இந்த நிலையில் தான் முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ரிக்கி ராதன் பண்டிட் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிக்கி ராதன் பண்ட்டி, வருகிற 2031 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் இணைந்து எங்களை எதிர்ப்பார்கள் என கணித்திருந்தேன். இப்போது சொல்கிறேன், என்னை பொறுத்தவரை தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுக இருக்காது. 2வது இடத்துக்கு தனுஷ் வந்துவிடுவார். தனுஷ் சார் தான் முடிவெடுக்கணும், அவரது ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை – பரபரப்பு தகவல்

கடந்த சில வாரங்களுக்கு முன் தனது ரசிகர் மன்றத்துக்கு என தனி கட்சிக்கொடியை தனுஷ் அறிமுகப்படுத்தினார். இது அவரது அரசியல் வருகையின் முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. காரணம் இதற்கு முன் கேப்டன் விஜயகாந்த், முதல்வர் விஜய் உள்ளிட்டோரும் தங்கள் ரசிகர் மன்றத்துக்கு என பிரத்யேக கொடியை அறிமுகப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அதனை தனுஷின் ரசிகர் மன்ற தலைவரும் பிரபல இயக்குநருமான சுப்ரமணிய சிவா மறுத்தார். இந்த நிலையில் ரசிகர் மன்ற விழாவில் தனுஷ் பேசியது மீண்டும் அவரது அரசியல் வருகை குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Follow Us