கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி
Local Holiday for Kanniyakumari District : திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அய்யா வைகுண்டநாதரின் 194 வது அவதார திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னயாகுமரியில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கன்னியாகுமரி, பிப்ரவரி 25 : தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆன்மிக விழாக்களில் ஒன்று அய்யா வைகுண்டசாமியின் அவதார திருநாள். அய்யா வைகுண்டசாமியின் திருவிழா வைகாசி, ஆவணி, மற்றும் தை ஆகிய மாதங்களில் தலா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் குறிப்பாக மாசி 19 அன்று அய்யா வைகுண்டசாமியின் அவதார திருவிழா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள வழிபாட்டு மையங்களில இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
திருநெல்வேலியில் விடுமுறை அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டசாமி திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமியின் 194வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 04, 2026 அன்று புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.290 கோடியில் 6 முக்கிய அறிவிப்புகள்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்!




மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் அன்றைய நாள் பொதுத்தேர்வுகள் அல்லது தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அது வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் வழக்கம் போல தேர்வு மையங்களுக்கு செல்வதில் எந்த தடையும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வங்கிகள் மற்றும் அரசு கருவூலங்கள் வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற மார்ச் 14, 2025 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரயில்களில் அட்டகாசம் செய்யும் எலிகள்.. ‘பொறி’ வைத்து பிடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை..
கன்னியாகுமரியில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
அதே போல கன்னியாகுமரி சாமித்தோப்பு பகுதியில் நடைபெறும் அய்யா வைகுண்டநாதரின் 194 வது அவதார திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4, 2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மார்ச் 10, 2026 செவ்வாய்கிழமை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களில் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அது வழக்கம் போல நடைபெறும். கன்னியாகுமரியில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பதிலாக மார்ச் 7, 2026 மற்றும் மார்ச் 14, 2026 ஆகிய சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அன்றைய தினம் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.