AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரீல்ஸ் வீடியோ பார்த்து ஆற்றில் குளிக்க வந்த மாணவர்கள் பரிதாப மரணம்  – கோவை கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்

Students Drown in Kerala River : கேரள மாநிலம் கோழிக்கோடு திருவாம்பாடி இருவழிஞ்சி ஆற்றில் குளிக்க வந்த கோவை உக்கடத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகள் மீட்டு முதலுதவி அளித்தும் பலனின்றி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரீல்ஸ் வீடியோ பார்த்து ஆற்றில் குளிக்க வந்த மாணவர்கள் பரிதாப மரணம்  – கோவை கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்
ஆற்றில் குளிக்க வந்த மாணவர்கள் பரிதாப மரணம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Nov 2026 21:46 PM IST

கோவை, நவம்பர் 29 : கேரள (Kerala) மாநிலம் கோழிக்கோடு திருவாம்பாடி இருவழிஞ்சி ஆற்றில் குளிக்க வந்த கோவை உக்கடத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகள் மீட்டு முதலுதவி அளித்தும் பலனின்றி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரீல்ஸ் வீடியோ பார்த்து மாணவர்கள் ஆற்றில் குளிக்க வந்ததது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் வீடியோ பார்த்து ஆற்றில் குளிக்க வந்த மாணவர்கள் பரிதாப மரணம்

​ சமூக வலைதளங்களில் வெளியான ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து விட்டு, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திருவாம்பாடியில் உள்ள இருவழிஞ்சி ஆற்றில் குளிக்கச் சென்ற கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் 5 மாணவர்கள் கொண்ட குழு, சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து விட்டு, நவம்பர் 29, 2026 இன்று காலை கேரளாவின் திருவாம்பாடி பகுதியில் உள்ள புல்லூரம்பாறை சுற்றுலாத் தலத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை மசோதாவால் ‘தமிழ்மொழிக்கு ஆபத்து… ஜனநாயகம் முடிவுக்கு வரும் – ராகுல் காந்தி எச்சரிக்கை

​இந்த நிலையில் அங்குள்ள இருவழிஞ்சி ஆற்றில் மாணவர்கள் உற்சாகமாகக் குளிக்க இறங்கி உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஆற்றின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் ஆபத்து குறித்து மாணவர்கள் தெரியாமல் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கத் தொடங்கினர். மாணவர்களின் அபயக் குரலைக் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதிவாசிகள் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து, நீரில் மூழ்கிய இருவரையும் வெளியே மீட்டு வந்தனர். அவர்களது உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடியாக இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) முதலுதவியும் அளிக்கப்பட்டது.

​பின்னர், இருவரும் உடனடியாகத் திருவாம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் கோவை உக்கரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய முகமது நௌஃபல் மற்றும் கோவையில் கல்லூரி பயிலும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மன்சூர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : வாழ்வா சாவா என்ற போராட்டம்! தொகுதி மறுவரையறையை ஆதரித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

சமூக வலைதள வீடியோக்களைப் பார்த்து விட்டு, நீந்தத் தெரியாத மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் நீர் சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி வந்து ஆறுகளில் இறங்குவதாகவும், ஆற்றின் ஆழம் மற்றும் ஆபத்துகள் குறித்து உள்ளூர்வாசிகள் விடுத்த எச்சரிக்கைகளைப் பெரும்பாலும் புறக்கணிப்பதே இதுபோன்ற தொடர் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Follow Us