வங்கதேசம் சுதந்திரம் இல்லையெனில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிபணிந்திருப்போம்.. ஷேக் ஹசீனா!
Bangladesh Former PM Sheikh Hasina : வங்கதேசம் சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால் தற்போது வரை பாகிஸ்தான் ராணுவத்தின் காலடியில் தான் இருந்திருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார். அது தொடர்பான முழுவிவரத்தை பார்க்கலாம்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் இல்லாமல் நாடு சுதந்திரம் பெற்றிருக்காது என்றும், இல்லையெனில் மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் காலடித்தடங்களை தொடர்ந்து சகித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் அவாமி லீக் இன் தயா மூர்த்தி நேரலை தொடரின் 98- ஆவது அத்தியாயத்தில் ஒளி வடிவிலான மெய்நிகர் உரையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இத்தகைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார். தனது அரசு கவிழ்வதற்கு காரணமான மாணவர் தலைமையிலான கிளர்ச்சியை தொடர்ந்து, 2024- இல் வங்கதேசத்தில் இருந்து தப்பிவந்த ஹசீனா, தற்போது வரை புதுடெல்லியில் தங்கி இருந்து வருகிறார். வங்கதேசத்தில் 2 பேர் உயிரிழக்க வழிவகுத்த புதிய வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த அதே வேளையில் அவரது கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
அரசியல் முக்கியத்துவத்தை மீட்டெடுக்க முயற்சி
ஹசீனா தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் தலைமையில் நடைபெற்ற 1971 விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது வெற்றியை வங்கதேசம் கொண்டாடும் நாளான டிசம்பர் 16 அன்று தாயகம் திரும்புவதாக அவர் அறிவித்த சில நாட்களுக்கு பிறகு இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹசீனா தனது அரசியல் முக்கியத்துவத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதாக தோன்றும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், சிறைவாசத்தையோ அல்லது மரணத்தையே எதிர்கொள்ள தயாராக இருக்கும் ஒரு துணிச்சலான தலைவராக தன்னை முன் நிறுத்துவதன் மூலம் அவாமி லீக் கட்சி சகாக்கள், ஆதரவாளர்களுடன் ஒற்றுமையே வெளிப்படுத்துவதன் மூலம், ஆளும் பிஎன்பி அரசை இக்கட்டான நிலைக்கு தள்ள முயற்சிக்கிறார்.
மேலும் படிக்க: “நிலநடுக்கம் வருது… தரையிறங்க வேண்டாம்!” – லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு
கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து அவர், தனது உரையில், நாம் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். நாம் வாழ வேண்டுமானால் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களை ஒவ்வொருவராக வருகிறார்கள் என்று ஹசீனா தனது உரையில் எந்த ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். சித்திரவதை மற்றும் காவல் மரணங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டிய ஹசீனா கைதிகளுக்கு மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் இறக்கும் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் நடத்தப்பட்ட விதம்
மேலும், அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்களது உறவினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். போராட்ட வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை கேள்விக்குறியாக்கிய அவர், இதைவிட கொடூரமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!