ரஷ்ய அதிபர் புதின் உடன் செல்பி எடுத்த 17 வயது இந்திய சிறுவன்.. யார் இந்த ராகுல் ஜான் அஜு?
17-Year-Old Indian AI Entrepreneur Meets Russian President | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விளாடிமிர் புதின் உடன் இந்தியாவை சேர்ந்த 17 வயது சிறுவன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். யார் அந்த சிறுவன், புதின் உடன் புகைப்படம் எடுத்தது எப்படி என பார்க்கலாம்.
மாஸ்கோ, நவம்பர் 27 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) உடன் 17 வயது சிறுவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த 17 வயது சிறுவன் வேறு யாரும் இல்லை, இந்தியாவின் (India) இளம் தொழிலதிபர்களில் ஒருவர் தான் அவர். இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தது நடைபெற்றது எங்கு, புதினுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த சிறுவன் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு ஜர்னி மாநாடு
ரஷ்யா (Russia) தலைநகர் மாஸ்கோவில் (Moscow) நவம்பர் 26, 2026 முதல் நவம்பர் 28, 2026 வரை ஏஐ ஜர்னி எனும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முக்கிய அமர்வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் கஜகஸ்தான் அதிபர் காசிம் – ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோர் நேரில் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க : நிலவில் உருளைக்கிழங்கு விளைவிக்கலாம்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்!




300-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்
இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர். அந்த வகையில், கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும் 17 வயது இளம் தொழில்முனைவருமான ராகுல் ஜான் அஜு கலந்துக்கொண்டார். அப்போது அவருக்கு ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர், புதினுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதனை புதிய் புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ரியாத் கோபுரம் மீது ஹூதிக்கள் திடீர் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயம்.. வெளியுறவுத்துறை கண்டனம்!
இந்தியாவின் ஏஐ கிட் ராகுல் ஜான் அஜு
புதினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த இந்திய இளம் தொழிலதிபர், இந்தியாவின் ஏஐ கிட் என செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் தான், ரஷ்ய அதிபர் புதின் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர், சிறு வயதில் பொழுதுபோக்கிறகாக வீடியோக்களை உருவாக்கிக்கொண்டு இருந்த நான், 17 வயதில் புதினை சந்திப்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு தான் இணையத்தில் மிகவும் பேசும்பொருளாக உள்ளது.