AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியா கூட்டணி கூட்டம் – முதன்முறையாக பங்கேற்கும் தவெக

INDIA Alliance Meeting : இந்திய கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாக தவெக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அக்டோபர் 03, 2026 இன்று காலை 11 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி தலைவர்களின் ஆலோசனையில் முதல்முறையாக தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்

இந்தியா கூட்டணி கூட்டம் – முதன்முறையாக பங்கேற்கும் தவெக
இந்தியா கூட்டணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Oct 2026 11:54 AM IST

சென்னை, அக்டோபர் 3 : இந்திய கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாக தவெக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அக்டோபர் 03, 2026 இன்று காலை 11 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி தலைவர்களின் ஆலோசனையில் முதல்முறையாக தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்

இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்கும் தவெக

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 3, 2026 இன்று சென்னையில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆளும் கட்சியான தவெக முதன்முறையாகப் பங்கேற்கவுள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க : உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி – அண்ணாமலை அறிவிப்பு

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில், தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அடுத்தகட்டமாக எந்த வகையான போராட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தத் திருத்தப் பணியின்போது ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவை தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதன் காரணமாக, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளிடையே வலுத்து வருகின்றன.

முன்னதாக டெல்லியில் கடந்த செப்டம்பர் 30, 2026 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில் திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது. இதனிடேயே தவெகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 03 இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் தவெக பங்கேற்றுள்ளது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க : “பழி பாவத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை!”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பை நிராகரித்த சிபிஎம் சண்முகம்!!

இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் தவெக பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்பது இதுவே முதன்முறை. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் அணியுடன் தவெகவின் உறவு வலுப்பெறுவதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. மேலும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவதும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

Follow Us