Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்…செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

Vijay Public Meeting Update: ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அந்தக் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்…செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!
ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு புதிய தகவல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Dec 2025 14:06 PM IST

ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி கேட்டு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு அளித்திருந்தனர். இதற்காக விஜயமங்கலம் பகுதியில் உள்ள பெருந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் போலீசார், தவெக நிர்வாகிகள் ஆகியோர் மேற்கண்ட இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் துறை சார்பில் 84 விதிமுறைகள் அளிப்பு

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக்காக அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிகழ்ச்சிக்காக காவல்துறை தரப்பிலிருந்து 84 விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!

சுமார் 25 ஆயிரம் பேருக்கு அனுமதி

ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

தவெக இரு முக்கிய புள்ளிகள் இணைகின்றனரா

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு தங்களது கருத்துக்களை கூற உரிமை உள்ளது. இவையெல்லாம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எப்படி எல்லாம் கூட்டணி அமையும் என்பது அந்த நேரத்தில்தான் தெரியவரும். தமிழக வெற்றிக் கழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இணைய உள்ளனரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். இதே போல, கே. ஏ. செங்கோட்டையனின் அண்ணன் மகன் அ தி மு க வில் இணைந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

மேலும் படிக்க: முதல்வர் பதவியில் விஜய் உறுதியாக அமருவார்…புஸ்ஸி ஆனந்த்!