ஸ்டாலின் சார் தில்லு இருந்தால் தேர்தலில் மோதி பாருங்கள்…ஆதவ் அர்ஜூனா அட்டாக்!
Aadhav Arjuna Criticize Stalin: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் மோதி பாருங்கள் என்று தமிழக வெற்றி க் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேரடியாக அட்டாக் செய்து பேசினார் .
புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசியதாவது: கரூர் சம்பவத்துக்கு பிறகு, சுமார் 72 நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் களமிறங்கியுள்ளார். முன்னதாக, புதுச்சேரி காவல்துறைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறை மட்டுமின்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காவல்துறை தான் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணி காப்பதாக கூறும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், புதுச்சேரி காவல்துறையை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : புதுவையில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு.. தீவிரமாகும் விசாரணை…
ஸ்டாலின் சார் தில்லு இருந்தால் தேர்தலில் மோதுங்கள்
இந்தியாவுக்கே, புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை போல தமிழகத்தில் அளித்தது கிடையாது. எனவே, எங்கள் அண்ணன் தவெக தலைவர் விஜய் சொல்வது போல தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார் தில்லு இருந்தா தேர்தலில் மோதி பாருங்கள். அரசு மூலமும், காவல்துறை மூலமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பிரச்சாரத்தை முடக்குவதை முதலில் நிறுத்த வேண்டும்.




தவெக பிரசாரத்தை யாராலும் நிறுத்த முடியாது
இல்லையெனில், காற்றையும், தண்ணீரையும் எப்படி நிறுத்த முடியாதோ அதே போலத் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதனை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது. புதுச்சேரியில் உள்ள எதிர்க் கட்சிகள் விஜய் எதற்காக இங்கு வருகிறார் என்று கேள்வி எழுப்பினார். இதே போல தான் எம். ஜி. ஆர்.இடமும் நீங்கள் எதற்காக புதுச்சேரி வருகிறீர்கள். தமிழகத்தில் போட்டியிட வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினர். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி வருகின்றனர்.
புதுச்சேரியின் அடுத்த 50 ஆண்டு கால் வரலாறு எழுதப்படும்
எனவே, எம். ஜி. ஆரை போல தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரிக்கும் விஜய் மிகப்பெரிய திட்டம் வைத்துள்ளார். அடுத்த 50 ஆண்டு காலம் புதுச்சேரிக்கான வரலாற்றை தமிழக வெற்றி கழகத்தின் மூலமாகவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேச்சின் மூலமாகவும் புதிதாக எழுதப்படும். மதுரையில் சுமர் 500 ஏக்கரில் மாநாடு நடைபெற்றது. இதேபோல எந்த கட்சியும் மாநாட்டை நடத்தவில்லை. விரைவில் ஒட்டு மொத்த புதுச்சேரி மக்களும் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!