’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு
TTV Dhinakaran : பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது என்றும் நயினார் நாகேந்திரன் தான் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மதுரை, செப்டம்பர் 06 : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA Alliance) இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக நயினார் நாகேந்திரனே (Nainar Nagendran) காரணம் என டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விலகிய நிலையில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கிறது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே இப்போது மோதல் போக்கு நிலவி வருகிறது.
இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், அதனை சீனியர் தலைவர்கள் தலையீட்டு சமாதானம் செய்தனர். இந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதை அடுத்து, தற்போது டிடிவி தினகரனும் விலகி இருக்கிறார். அதே நேரத்தில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் செங்கோட்டையன் கெடு விதித்து இருக்கிறது.
Also Read : பாஜகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி? அண்ணாமலை சொன்ன கருத்து.. மாறுமா கூட்டணி கணக்கு?




நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் மதுரையில் 2025 செப்டம்பர் 06ஆம் தேதியான இன்று டிடிவி தினரகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. நயினார் நாகேந்திரன் தான் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக காரணம் நயினார் நாகேந்திரன் தான்.
பிரதமரை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க முடியாத விவகாரத்தில் நயினாரின் பதில் ஆணவத்தின் வெளிப்பாடு. டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன இடர்பாடு என்பது டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியும். அதை சரி செய்தால் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு செல்வது பற்றி முடிவு எடுப்போம். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. நிதானமாக யோசித்து எடுத்த முடிவு. ஓபிஎஸ் விஷயத்தில் நயினார் நாகேந்திரன் அப்பட்டமாக பொய்யை ஆணவத்துடன் பேசினார்.
Also Read : என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன்.. ரிப்ளை கொடுத்த செங்கோட்டையன்.. அடுத்து என்ன?
அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஓபிஎஸ்க்கு நடந்தது நாளை எனக்கும் நடக்கும். நாங்கள் சிறயவர்கள். பெத்தவர்கள் வந்துவிட்டார்கள் என அவர்கள் நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்ல.2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தான் கூறினேன். கூட்டணி என்று எழுதுகின்றனர் ” எனக் கூறினார்.