அரசு ஊழியர் வீடுகட்ட முன்பணம்: அட்வான்ஸ் வரம்பு ரூ.50 லட்சமாக உயர்வு
GPF Advance Limit : அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணமாக ஜிபிஎஃப் தொகையில் எடுப்பதற்கான வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஜிபிஎஃப் எஎப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நடைமுறையில் உள்ளது.
சென்னை, மார்ச் 5 : அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணமாக ஜிபிஎஃப் தொகையில் எடுப்பதற்கான வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஜிபிஎஃப் எஎப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். விரும்பினால் கூடுதல் பங்களிப்பும் செலுத்திக் கொள்ளலாம்.
வீடு கட்டுவதற்காக அரசு ஊழியர்களுக்கான ரூ.50 லட்சமாக உயர்வு
தமிழக அரசு இதுவரை ரூ.20 லட்சமாக இருந்த முன்பண வரம்பு தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி. உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியம் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவிகிதத்தை கட்டாய சேமிப்பு தொகையாக செலுத்த வேண்டும். விருப்பமிருந்தால் இதற்கு மேல் கூடுதலாகவும் அவர்கள் செலுத்தலாம்.
இதையும் படிக்க : T. Nagar Constituency Election 2026: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..
இந்த பொது வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து கல்வி, மருத்துவம், திருமணம் வீடு கட்டுதல் என பல்வேறு தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை வீடு கட்டுவதற்காக முன்தொகை அதிகபட்மாக ரூ.20 லட்சம் வரை பெறலாம் என்ற வசதி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய கட்டுமான செலவுகள், பொருட்களின் விலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதற்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேமுதிகவிற்கு மீண்டும் முரசு சின்னம்.. நா.த.கவிற்கு விவசாயி சின்னம்… புதுச்சேரியில் பலத்தை நிரூபிக்குமா?
அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நதி விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விதி 15(A) உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்காக முன் பெறக்கூடிய தொகை அதிகபட்சம் ரூ.20 லட்சம் அல்லது மாத ஊதியத்தில் 75 மடங்கு – இதில் குறைவானது எதுவோ அதன் அடிப்படையில் முன்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள விதிகளின் படி, அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக மத்திய, மாநில அரசு வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் சூழலலி, அதனுடன் சேர்ந்து பொது வருங்கால வைப்பு நிதி முன் பணமாக பெறப்படும் தொகை ரூ.50 லட்சத்தை பெறக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.



