AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் ‘விடியல்’ வார்த்தை நீக்கப்பட்டது ஏன்? அமைச்சர் கொடுத்த விளக்கம்!

முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக முடக்காமல் தொடர்ந்து செயல்படுத்தினாலும், அதன் பெயர்களில் உள்ள பிரத்தியேக அரசியல் முத்திரைகளை அல்லது முந்தைய கட்சியின் அடையாள வார்த்தைகளை மாற்றுவது புதிய அரசின் உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, முந்தைய ஆட்சி காலத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரும் இதே போன்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் ‘விடியல்’ வார்த்தை நீக்கப்பட்டது ஏன்? அமைச்சர் கொடுத்த விளக்கம்!
மகளிர் விடியல் பயணம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 07:00 AM IST

சென்னை, ஜூலை 10: தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில், முந்தைய அரசின் அடையாளமான ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு வருவது தற்போதைய அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்‘ திட்டத்தில், எந்தவிதமான பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. எனினும், இது ஏற்றுக்கொள்ளும் படியான விளக்கமாக இல்லாதது மேலும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்

திட்டத்தின் பின்னணியும் புதிய மாற்றமும்:

கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பெண்களுக்கான கட்டணமில்லா அரசுப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பேருந்துகளில் விளம்பரங்களும் செய்யப்பட்டன. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய அரசின் கீழ் இத்திட்டத்தில் உள்ள ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டு வருகிறது.

தீவிரமாகும் பெயர் மாற்றப் பணிகள்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மண்டலங்களில் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறப் பகுதிகளில் உள்ள டிஜிட்டல் டிஸ்பிளே பலகைகள் மற்றும் ஸ்டிக்கர்களில் இருந்து ‘விடியல்’ என்ற வார்த்தை முழுமையாக நீக்கப்பட்டு, புதிய பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகளில் இந்த மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. அதேபோல், சென்னையிலும் பல்வேறு பேருந்துகளில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அரசின் உத்தி மற்றும் நிர்வாக விளக்கம்:

முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக முடக்காமல் தொடர்ந்து செயல்படுத்தினாலும், அதன் பெயர்களில் உள்ள பிரத்தியேக அரசியல் முத்திரைகளை அல்லது முந்தைய கட்சியின் அடையாள வார்த்தைகளை மாற்றுவது புதிய அரசின் உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, முந்தைய ஆட்சி காலத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரும் இதே போன்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ மறுப்பு:

இந்த பெயர் மாற்றம் குறித்து ஒரு தரப்பில், “நிர்வாக ரீதியாகவும் பேருந்து பலகைகளில் மக்கள் எளிதாக வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலுமே ‘மகளிர் பயணம்’ என்று சுருக்கப்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் பெயரில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், பெயர் மாற்றம் செய்யக் கோரி அதிகாரிகளுக்கு எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை என்றும் போக்குவரத்துத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பார்த்திபன் விளக்கம்:

செய்தியாளர் சந்திப்பில் இப்பெயர் மாற்றம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இதில் பெரிய பெயர் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து என்பதால் அது ‘மகளிர் பேருந்து’ அல்லது ‘மகளிர் பயணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்க்கும்போது எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை” என்று கூறினார்.

அரசியல் வாதங்களும் கண்டனங்களும்:

இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு திமுகவினர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒரு திட்டத்தின் அடையாளத்தை அரசியல் காரணங்களுக்காக மாற்றுவது முறையல்ல என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மறுதரப்பினர், “அரசுத் திட்டங்கள் என்பது பொதுமக்களுக்கானதே தவிர, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது. திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா சலுகைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை; பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்பதால் மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை” என்று வாதிடுகின்றனர்.

மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை:

அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பலகைகள் மாற்றப்பட்டு, நடைமுறையில் ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு வந்தாலும், ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவது குறித்து அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு முறையான அரசாணையோ அல்லது எழுத்துப்பூர்வமான அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us