ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள்.. முதலமைச்சர் விஜய் தலைமையில் கண்காணிப்பு குழு அமைப்பு…
இன்னலுக்கு ஆளானவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்தல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை, சட்டத்தை அமல்படுத்தும் பல்வேறு துறைகள் மற்றும் அலுவலர்களின் செயல்பாடுகள், மாநில அரசால் பெறப்படும் அறிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வு செய்யப்படும்.
ஜூலை 10, 2026: முதலமைச்சர் விஜய் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை மறுசீரமைத்து, தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவில் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 37 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்கள் மரிய வில்சன், வன்னி அரசு, ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், தனபால், ராணி ஸ்ரீகுமார், சசி காஞ்சல், ரவிக்குமார் உள்ளிட்ட மொத்தம் 8 எம்.பி.க்களும், 37 எம்.எல்.ஏ.க்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் – புதிய கண்காணிப்பு குழு:
மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு ஆண்டுக்கு இரு முறை கூடும். அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுப்பது, சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் அதற்கான முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய நீதி, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதிலும் இந்தக் குழு முக்கியப் பங்காற்றும்.
மேலும் படிக்க: ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் ‘விடியல்’ வார்த்தை நீக்கப்பட்டது ஏன்? அமைச்சர் கொடுத்த விளக்கம்!
இந்தக் குழு, ஆண்டுக்கு இரு முறை கூடும் கூட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) திருத்தச் சட்டம், 2015 ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்.
இந்த குழுவின் முக்கிய நோக்கம் என்ன?
மேலும், இன்னலுக்கு ஆளானவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்தல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை, சட்டத்தை அமல்படுத்தும் பல்வேறு துறைகள் மற்றும் அலுவலர்களின் செயல்பாடுகள், மாநில அரசால் பெறப்படும் அறிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வு செய்யப்படும்.
மேலும் படிக்க: ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து பெண்களுக்குமா? அமைச்சர் ரமேஷ் கொடுத்த செம அப்டேட்!
அதோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) திருத்தச் சட்டம், 2015-இன் தொடர்புடைய பிரிவுகளின்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதையும் உயர்நிலை கண்காணிப்பு குழு ஆய்வு செய்யும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.