Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செப்டம்பர் 13 முதல் சுற்றுப் பயணம்? திருச்சியை குறிவைக்கும் விஜய்… முழு விவரம் இதோ!

Tvk Vijay State Wide Tour : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளார். 2025 செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தனது சுற்றுப் பயணத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தனது சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கி மதுரையில் நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

செப்டம்பர் 13 முதல் சுற்றுப் பயணம்? திருச்சியை குறிவைக்கும் விஜய்… முழு விவரம் இதோ!
தவெக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Sep 2025 19:45 PM IST

சென்னை, செப்டம்பர் 04 : தமிழக வெற்றிக் கழக தலைவர் (Tamilaga Vettri Kazhagam) விஜய் 2025 செப்டம்பர் 13ஆம் தேதி முதல் மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது முதற்கட்ட சுற்றுப் பயணத்தை விஜய் (TVK Chief Vijay) தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் 120 நிர்வாக மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களுக்கு விஜய் பயணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும்  8 மாதங்களே உள்ளது. இதனால்  அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே  மாவட்ட  வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். மேலும், பாமக, தேமுதிகவுக்கு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கிடையில், புதிதாக தேர்தல் களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய் எப்போது மக்கள் சந்திப்பார், சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என பல கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் வோர்க் பர்ம் அரசியல் செய்து வருவதாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதற்கெல்லாம் விரைவில் விஜய் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளார். அதாவது, மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.  இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது. 

Also Read : ”தளபதி டிவி”.. புதிய தொலைக்காட்சியை தொடங்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. பிளான் என்ன?

செப்டம்பர் 13 முதல் விஜய் சுற்றுப் பயணம்?

இந்த நிலையில், விஜயின் சுற்றுப் பயணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளாகவும், முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2025 செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும் இந்த சுற்றுப் பயணம், மதுரை மாவட்டத்தில் 2025 டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மூன்றாம் கட்டமாக தென் மாவட்டங்கள், கொங்கு என அடுத்தடுத்து தனது சுற்றுப் பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின் போது, தொகுதி வாரியாக இருக்கும் பிரச்னைகளை பட்டிலிட்டு விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : புதுச்சேரியில் கூட்டணி? தவெக சொன்ன முக்கிய தகவல்.. விஜயின் முடிவு தான் இறுதி!

தாக்கத்தை ஏற்படுத்துமா விஜயின் சுற்றுப் பயணம்?

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் சுற்றுப் பயணங்கள் தனிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு இருக்கிறது. விஜயும் அதனை தற்போது கையில் எடுத்துள்ளார். பாஜக தனது கொள்கை எதிரி என்றும், திமுக தனது அரசியல் எதிரி என்றும் விஜய்  மேடைக்கு மேடை கூறி வருகிறார். மேலும், 2026 தேர்லில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனவும் கூறி வருகிறார். அதே நேரத்தில், 1967, 1977ஆம் ஆண்டுகளில் நடந்ததை போல மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தவெக ஏற்படுத்தும் எனவும் சூளுரைத்து வருகிறார். எனவே, தவெக தலைவர் விஜயின் அரசியல் சுற்றுப் பயணம் என்ற அஸ்திரம் அவருக்கு கைகொடுக்குமா என்பது 2026 தேர்தல் முடிவே பதில் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.