Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயின் அடுத்த மூவ்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்.. வெளியான முக்கிய தகவல்

TVK Chief Vijay : 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2025 செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று கூட, பனையூர் அலுவலகத்தில் விஜய் சுற்றுப் பயணம் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விஜயின் அடுத்த மூவ்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்.. வெளியான முக்கிய தகவல்
தவெக தலைவர் விஜய்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 Aug 2025 07:28 AM

சென்னை, ஆகஸ்ட் 31 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  (TVK Chief Vijay) 2025 செட்படம்பர் மாதத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 செப்டபம்ர் 15,16ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் விஜய் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்ட வருகின்றனர். இதில் அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எப்போது மக்களை சந்திப்பார், சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என கேள்விகள் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

அதே நேரத்தில், விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்து வருவதாகவும் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படியான சூழலில், விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஇதற்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என பெயரிடப்பட்டுள்ளது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தனது சுற்றுப் பயணத்தை விஜய் தொடங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

Also Read : விஜய் மீதான வழக்கு – மதுரை காவல் நிலையத்துக்கு மாற்றம் – காரணம் இதுவா?

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்

குறிப்பாக, ஈரோடு அல்லது காஞ்சிபுரத்தில் தொடங்குவார் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று கூட, பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் சுற்றுப் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், அனுமதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் விஜய் தனது விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ள வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 2026 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் களத்திற்கு வந்த விஜய், தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read : பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!

1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததை போல, மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தவெக ஏற்படுத்தும் என அனைத்து மேடைகளில் விஜய் சூளுரைத்து வருகிறார்ஆனால், அரசியல் களமோ அதற்கு ஏற்ப இல்லை எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், தவெக தமிழக  அரசியலில் குறிப்பிடத்தகுந்த வாக்கை பிரிக்கும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.