விஜய் மீதான வழக்கு – மதுரை காவல் நிலையத்துக்கு மாற்றம் – காரணம் இதுவா?
TVK VIjay: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார், மதுரை தவெக மாநாட்டில் பவுண்சர்கள் தாக்கியதாக பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் (Vijay) தலைமையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் பகுதியில் விஜய் நடந்து ரசிகர்களை சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது சில ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் தடுப்புகளைத் தாண்டி விஜய்யை சந்திக்க முயற்சித்தர். அவர்களை பவுண்சர்கள் தடுத்தனர். இந்த நிலையில் பவுண்சர்கள் தாக்கி கயாமடைந்ததாக சரத்குமார் என்பவரும் அவரது அம்மாவும் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்கு மதுரைக்கு மாற்றம்
இதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மற்றும் பெயர் குறிப்பிடாத 11 பவுண்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடம் மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், வழக்கு தற்போது மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
விஜய் மீது வழக்குப்பதிவு
#WATCH | Madurai, Tamil Nadu | TVK chief and actor Vijay walked the ramp, greeting the attendees, as he arrived at the venue where he addressed a conference for TVK party workers. (21.08) pic.twitter.com/z1UnEYa4he
— ANI (@ANI) August 21, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டின்போது ராம்ப் பகுதியில் ஏற முயன்ற தொண்டர்களை பவுன்சர்கள் தடுத்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் விதமாக தூக்கி எறிந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொண்டர்களை பவுன்சர்கள் நடத்திய விதம் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார். மதுரை மாநாட்டில் கலந்துகொண்ட இவர், விஜய்யை சந்திக்கும் ஆர்வத்தில் ரேம்ப் மீது ஏறினார். அப்போது பவுன்சர்கள் அவரை கீழே இறக்கிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சரத்குமார் தனது தாயுடன் பெரம்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.
அவரது புகாரில் பவுன்சர்கள் தன்னை தாக்கியதுடன், தூக்கி வீசியதில் தனது முதுகு பகுதியில் அடிபட்டதாகவும் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது குன்னம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.