AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu SSLC Result 2026: வெளியாகும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் தெரிந்துக்கொள்வது எப்படி?

Tamil Nadu SSLC 10th Class Result Download: மார்ச்/ஏப்ரல் 2026இல் நடைபெற்ற 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

Tamil Nadu SSLC Result 2026: வெளியாகும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் தெரிந்துக்கொள்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 May 2026 20:14 PM IST

மே 19, 2026: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த சூழலில், திட்டமிட்டபடி இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வை 12,767 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 80 ஆயிரத்து 286 மாணவர்கள் எழுதியுள்ளனர். மேலும், 25,581 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தமாக 9 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் 4,719 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள்:

இந்த தேர்வுப் பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,950க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்/ஏப்ரல் 2026இல் நடைபெற்ற 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

முடிவுகள் தெரிந்துக்கொள்வது எப்படி?

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்:

தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள்:

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?

வாட்ஸ்அப் மூலம் தேர்வுய் முடிவுகளை தெரிந்துக்கொள்வது எப்படி?

அதேபோல், இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்அப் செயலி வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக 7845252525 என்ற எண்ணை கைப்பேசி தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணிற்கு “Hi” என அனுப்ப வேண்டும்.

பின்னர் வரும் வழிமுறைகளை பின்பற்றி துறையின் பெயர் மற்றும் வகுப்பைத் தேர்வு செய்து, தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப் உரையாடல் மூலம் கிடைக்கும். தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us