AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பி.எம் ஸ்ரீ திட்டம்.. முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன்..

தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால், இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

பி.எம் ஸ்ரீ திட்டம்.. முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 16:48 PM IST

மே 19, 2026: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் செய்தியாளர் சந்திப்பில், “இருமொழிக் கொள்கை என்பது தமிழக வெற்றி கழகத்தின் பிரதான கொள்கையாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், பி.எம். ஸ்ரீ திட்டம் குறித்தும் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய முதல்வர் விஜய் அவர்கள்,

முதல்வர் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்:

முதலில் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருக்கட்டும், பி.எம். ஸ்ரீ திட்டமாக இருக்கட்டும் — லட்சக்கணக்கான கல்வியாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கல்வி முன்னேற்றத் திட்டங்களே. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாநிலங்களில் கல்வி சிறப்பாக உள்ளது. சென்ற ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்காததற்குக் காரணம், இதுபோன்ற நல்ல திட்டங்களை அரசியல் ரீதியாக எதிர்த்ததுதான்.

மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசியலில் கனிமொழி?.. மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

இங்கே தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால், இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள்.

ஆழமாக கலந்தாலோசிக்காமல் கருத்தை தெரிவிக்க கூடாது:

ஆகையால், புதிய அமைச்சர்கள் எந்தக் கொள்கையையும் தீவிரமாக விசாரிக்காமல், ஆழமாக கலந்தாலோசிக்காமல் கருத்து சொல்வது, மேம்போக்காக துறையை எடுத்துச் செல்வதற்கே வழிவகுக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us