AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 14:42 PM IST

மே 19, 2026: சுமார் 1.5 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் லட்சத்தீவு வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா, உள் கர்நாடகம் மற்றும் கேரளம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. மேலும் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை, கேரளம், தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக, மே 19ஆம் தேதியான இன்று கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம் முழுவதும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. ஆதாரங்களுடன் விசாரணைக்கு அனுமதி கோரிய ED.. தவெக அரசின் முடிவு என்ன?

மே 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகம் முழுவதும் லேசான மழையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மே 24 மற்றும் 25ஆம் தேதிகளைப் பொருத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகத்தில் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us