AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியம் ஒப்புதல்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், புதிய நீதிபதிகள் நியமனம் நீதித்துறை செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல் மற்றும் பொது நல வழக்குகளின் விசாரணை வேகம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியம் ஒப்புதல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 17:09 PM IST

சென்னை, மே 19, 2026: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து பலர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ். அல்லி, மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க:  புது திட்டமா? ஏற்கெனவே இருந்ததா? வாட்ஸ் அப் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட்.. உண்மை என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 நீதிபதிகள் நியமனம்:

மேலும், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ. மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே. அப்பாதுரை மற்றும் ஆர். அனிதா உள்ளிட்ட 10 பேரின் பெயர்களும் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

ஒப்புதல் அளித்த கொலிஜியம்:

இந்த பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பெயர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லையென்றால் துரோகியா – சி.வி சண்முகம் ஆவேசம்..

அடுத்த கட்டமாக, இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளன. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர், குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வ நியமன உத்தரவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலுவையில் இருக்கும் வழக்குகள் வேகமெடுக்கும் என நம்பிக்கை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், புதிய நீதிபதிகள் நியமனம் நீதித்துறை செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல் மற்றும் பொது நல வழக்குகளின் விசாரணை வேகம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us