AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த கை, கால் இயக்க மாற்றுத்திறனாளியான சிம்மச்சந்திரன் என்பவர்தான் இந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் அரசு அலுவலர் அல்ல; மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா அமைப்பின் பிரதிநிதியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?
ரீல்ஸ் வெளியிட்ட நபர்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 19:15 PM IST

மே 19, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் அறையில் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரி ஒருவர் ‘ரீல்ஸ்’ எடுத்து பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வந்த நிலையில், “அவர் உண்மையிலேயே அரசு அதிகாரியா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் கூட்டம்:

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் கீதா சதாசிவம், தண்டுவட பாதிப்படைந்தோர் சங்க நிறுவனர் ஞானபாரதி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் சமூக ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது ‘ரீல்ஸ்’ ஆக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இந்த வீடியோவை எடுத்தவர் அரசு அலுவலர் அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியம் ஒப்புதல்..

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அந்த அடிப்படையில், மொத்தம் 18 முதல் 21 பேர் வரை உறுப்பினர்களாக இருந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ வெளியிட்டது அரசு அதிகாரி இல்லை:

அதில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த கை, கால் இயக்க மாற்றுத்திறனாளியான சிம்மச்சந்திரன் என்பவர்தான் இந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் அரசு அலுவலர் அல்ல; மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா அமைப்பின் பிரதிநிதியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..

எனவே, “அரசு அதிகாரி ரீல்ஸ் பதிவு செய்துள்ளார்” என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்றும், உண்மை விவரங்களை அறியாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us