ஆளுநரின் உத்தரவின் பேரில்…. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக காரணம் என்ன?
Plus 2 Results : திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியானது. இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக ஆளுநர் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எந்தவொரு அரசும் இதுவரை பதவியேற்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் அந்த கட்சிக்கு போதுமான ஆதரவு இல்லை என கூறி அந்த கட்சியை ஆட்சி பொறுப்பேற்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனையடுத்து தவெகவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ள நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே நிலவியது. உடனடியாக வெளியானால் தான் அவர்கள் மேற்படிப்பு குறித்து முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியானது.




இதையும் படிக்க : “திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!
ஆளுநர் தரப்பில் வெளியான அறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் உடனடியாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், புதிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்கும் வரை முடிவுகள்…— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) May 8, 2026
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியாக ஆளுநர் காரணம் என ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்கும் வரை தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது, மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை தாமதப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு; மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு, தேர்வு முடிவுகளை எவ்விதத் தாமதமுமின்றி வெளியிடுவது இன்றியமையாதது என்று ஆளுநர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : “வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?”.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!
இந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விகிதம் 0.17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 93.19 சதவிகிதமும், மாணவிகள் 97 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட 3.81 சதவிகிதம் அதிகமாக மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.